“மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிப்பதால் வயிற்றெரிச்சல்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


“மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிப்பதால் வயிற்றெரிச்சல்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தாம்பரம்,

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. புதிதாக கட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து அங்கு ஆய்வு செய்தார்

அதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் 25 ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பட்டா வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம். காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும், பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி

2021 முதல் தற்போது வரை சுமார் 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம். பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துகிறேன். கடந்த 5 மாதங்களில் மட்டும் 7.27 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி உள்ளோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில்தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார்

திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும். தமிழக மக்கள் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடரும் தொடரும் தொடரும்

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story