தமிழ்நாடு அரசின் புதியக் கல்விக் கொள்கையை வரவேற்கிறேன் - செல்வப்பெருந்தகை

கல்விக் கொள்கையின் விசாலமான பார்வை அனைத்து துறைகளிலும் நமது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான திறனைக் கொடுக்கும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியின் தரத்தை மேலும் சிறப்பாகவும், அவர்களின் எதிர்காலத்திற்காக தொலைநோக்குப் பார்வையுடனும் உருவாக்கப்பட்டிருப்பதையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.
மாநில கல்விக் கொள்கையின் சரியான அணுகுமுறை, நமது கல்வி முறையை நிறைமதிப்பிற்கு உட்படுத்தும். கல்விக் கொள்கையின் விசாலமான பார்வை அனைத்து துறைகளிலும் நமது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான திறனைக் கொடுக்கும்.
நமது மாநிலத்திற்கு மிகுந்த பயனளிக்கும் மற்றும் சிந்தனைமிக்க கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழ்நாடு அரசின் புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






