அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன் - டி.டி.வி. தினகரன்

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதை அமித்ஷா ஏற்கனவே கூறிவிட்டார். மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்தபோதும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் அளித்தது. அ.தி.மு.க. அழைத்தால் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநயாக கூட்டணியில் அ.தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வேன். 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்' என்றார்.