சென்னையில் 14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை - தேர்தல் ஆணையம் தகவல்

25.6 லட்சம் பேரிடம் இருந்து எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை - தேர்தல் ஆணையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 64 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த உள்ள 40 லட்சம் வாக்காளர்களில் 25.6 லட்சம் பேரிடம் இருந்து எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 14.4 லட்சம் பே எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூத்தி செய்து வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், படிவம் 6-ஐ பூத்தி செய்து வாக்காளா பட்டியலில் சேரலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com