சேலத்தில் முன்னாள் பள்ளி மாணவிக்கு வாட்ஸ்அப்பில் பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் கைது

சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவிகள் யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தினகரன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர், அதே பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர்கள் தினகரன் மற்றும் ஜெகதீசன் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், கலெக்டர் உத்தரவின் பேரில் தற்போது சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவிகள் யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






