கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

காட்டுமன்னார்கோவில்.

காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்டம் எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை உள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 9 அடியாகும். இங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரி மற்றும் கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மாவட்டம், ஆகிய 4 மாவட்டத்தில் விவசாய பாசனத்துக்கு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கீழணை கடந்த 5-ந்தேதி முதல் 9 அடியை எட்டிய நிலையில் இருக்கிறது.

தற்போது பருவமழை தீவிரம் காரணமாக கல்லணை மற்றும் மேலணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் கடந்த 20-ந்தேதி கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மாலை கீழணையை வந்தடைந்ததும், வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் உபரிநீராக கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரிப்புக்கு ஏற்ப படிப்படியாக உபரிநீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 60,000 கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story