நன்றாக படி என கூறியது ஒரு குற்றமா...? தாய்க்கு கத்திக்குத்து

சிறுவன் நன்றாக படித்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து இப்படி கூறி வந்தது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பெண் ஒருவரை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டார் என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.
பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மகனை அவனுடைய தாய் நன்றாக படிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால், அந்த 14 வயது சிறுவன் நன்றாக படித்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து இப்படி கூறி வந்தது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் எரிச்சலடைந்து இருக்கிறான்.
இதனால், தாயை மகனே கத்தியால் குத்தியுள்ளது போலீசாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். நன்றாக படித்து வந்த சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






