சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியா? கூட்டணியா? - சீமான் பதில்


சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியா? கூட்டணியா? - சீமான் பதில்
x
தினத்தந்தி 13 April 2025 2:51 PM IST (Updated: 13 April 2025 2:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது.

தி.மு.க. கூட்டணி களநடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. பா.ம.க. கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. த.வெ.க கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது, அவரிடம் 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது, கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு கட்சி தொடங்கினால் நாம் இருவரும் கூட்டணி அமைக்கலாம். ஒரேஒரு கட்சியுடன் தான் கூட்டணி வைக்க எனக்கு வாய்ப்பு உள்ளது. அது டொனால்டு டிரம்ப் உடன் தான்' என்றார்.

1 More update

Next Story