முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி?

நெல்லை - பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
நெல்லை,
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இந்தத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்தநிலையில், வேலூரை சேர்ந்தவர் வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பம் செய்த நிலையில் மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. தேர்வர் விண்ணப்பித்த பாடத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மொழித்தாள் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்தது தேர்வரின் தவறு என வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.






