மத்திய அரசின் துணையின்றி மாநில அரசு செயல்படுவது கடினம்; நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், விருதுநகரில் பாஜக பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது,
ஒவ்வொரு பிள்ளைகளும் படிகக் வேண்டும் என அக்கறை கொண்டவர் காமராஜர். ஆனால் அவர் பிறந்த விருதுநகரில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 12ம் வகுப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே மாணவர்கள் செல்கின்றனர். இப்படிப்பட்ட நிலைமையைத்தான் இந்த ஆட்சி ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
மத்திய அரசுடன் மாநில அரசு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசிற்கு கிடைக்க இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் துணையின்றி மாநில அரசு செயல்படுவது கடினம். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர முடியும்
என்றார்.






