உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கித்தர வேண்டியது எனது கடமை - விஜய் பேச்சு

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 நிதியுதவியை விஜய் வழங்கினார்
சென்னை,
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து, த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்தித்தார். காவலில் இறந்தோரின் குடும்பத்தினர் 18 பேரிடம் தனித்தனியாக விஜய் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது விஜய் அவர்களிடம் பேசியதாவது; "உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கித்தர வேண்டியது எனது கடமை. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற தவெக முயற்சிக்கும். வழக்குகளின் செலவை தவெக முழுமையாக ஏற்கும்.' என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story






