மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தியது அ.தி.மு.க.தான்: செந்தில் பாலாஜி விளக்கம்


மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தியது அ.தி.மு.க.தான்: செந்தில் பாலாஜி விளக்கம்
x
தினத்தந்தி 23 April 2025 5:00 AM IST (Updated: 23 April 2025 5:01 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக நத்தம் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

சென்னை,

சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். அப்போது அவர், தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிகளவில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அதை மறைத்து விட்டு உறுப்பினர் பேசக்கூடாது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, அதாவது 56.9 சதவீதம் அளவுக்கு உயர்த்தினார்கள். அதன் பிறகு பெயரளவுக்கு 4 சதவீதத்தை குறைத்தார்கள். ஆனால் நாங்கள், 30 சதவீதம்தான் உயர்த்தினோம்.தமிழகம் முழுவதும் சீரான மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story