தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற ஜார்க்கண்ட் பெண் - நாமக்கலில் கைது

ஜார்க்கண்ட் மாநில போலீசார், நாமக்கல் போலீசாரின் உதவியோடு ரதி கோத்ராவை கைது செய்தனர்.
நாமக்கல்,
ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரத்தாப்பூர் பகுதியை சேர்ந்த ரதி கோத்ரா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் கக்கிரி என்பவருக்கும் திருமணம் ஆகி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே, ரதி கோத்ரா வேறொரு வாலிபரை காதலித்து வந்ததுள்ளார்.
தொடர்ந்து ரதி கோத்ரா தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரதி கோத்ரா தனது தகாத உறவிற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்பு, உடலை சாக்கடையில் வீசியுள்ளார்.
அதன்பிறகு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வந்து ஒன்றும் தெரியாதது போல ரதி கோத்ரா பணியாற்றி உள்ளார். இந்த வழக்கில் ரதி கோத்ராவை தேடி வந்த ஜார்க்கண்ட் மாநில போலீசார், நாமக்கல் மாவட்ட போலீசாரின் உதவியோடு அவரை கைது செய்து ஜார்க்கண்ட் அழைத்துச் சென்றனர்.






