கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு


கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு:  சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
x

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நாளை(நவ. 20) விசாரணைக்கு வருகின்றன. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story