கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

கமல்ஹாசன் அரசியலிலும் பல்வேறு புதிய உச்சங்களை தொட்டிட இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் காணும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அருமை சகோதரர் கமல்ஹாசனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய திரையுலகின் பெருமையை உலகறிய செய்திட்ட பன்முகக் கலைஞர் கமல்ஹாசன் அரசியலிலும் பல்வேறு புதிய உச்சங்களை தொட்டிட இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






