காஞ்சிபுரம்: ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் கல்லால் அடித்துக்கொலை


காஞ்சிபுரம்: ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் கல்லால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2025 12:38 PM IST (Updated: 22 Jun 2025 1:50 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்த அசாம் இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 5 வயது மகன் கடந்த 9 ம் தேதி காணாமல் போனதாக கூறி பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக போலீசார் கருதினர். பின்னர், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதன்படி, சிறுவன் ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில் அசாமைச் சேர்ந்த போல் தேவை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story