திண்டுக்கல் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்


திண்டுக்கல் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
x

பெரிய பள்ளிவாசலில் 2,500 கிலோ அரிசியை கொண்டு நெய் சாதம் தயார் செய்யப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் மிலாது நபி மற்றும் 41-வது மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேடசந்தூர் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பில், பெரிய பள்ளிவாசலில் 2,500 கிலோ அரிசியை கொண்டு நெய் சாதம் தயார் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுமார் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேடசந்தூர், திண்டுக்கல் பேகம்பூர், நாகையகோட்டை, தொட்டணம்பட்டி, ஆர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவை சாப்பிட்டு சென்றனர்.

1 More update

Next Story