தூத்துக்குடியில் 220 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி,
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, 220 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






