கன்னியாகுமரி: தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது- 6 பைக்குகள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
கன்னியாகுமரி: தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது- 6 பைக்குகள் மீட்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் மார்த்தாண்டம் டி.எஸ்.பி. நல்லசிவம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் ஆகியோர் கெண்ட தனிப்படை விசாரணை நடத்தி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் மகன் பிஜோய் (வயது 20) மற்றும் மூன்று 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com