குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு


குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
x

மர்ம ஆசாமி பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க வளையலை அபேஸ் செய்திருக்கலாம் என தெரியவந்தது.

கன்னியாகுமரி,

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி உஷா (வயது 55). இவர் சம்பவத்தன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள தனது அண்ணனை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். இதற்காக அவர் களக்காட்டில் இருந்து அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர் பஸ் வடசேரி பஸ் நிலையம் வந்ததும் அவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த மணி பர்சை எடுத்து பார்த்தபோது அதில் இருந்த 1½ பவுன் தங்க வளையலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் வளையல் கிடைக்கவில்லை.

அதன்பிறகு தான் மர்ம ஆசாமி பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க வளையலை அபேஸ் செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து உஷா வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story