கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்


கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
x

இன்று இரவு தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தஞ்சாவூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். இன்று இரவு தங்க மயில் வாகனத்தில் பிரகார உலாவும், அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது.

1 More update

Next Story