கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் ஆன்மா சந்தியடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை


கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் ஆன்மா சந்தியடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை
x

உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை கொடுக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

தென்காசி

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு கரூரில் பிரசாரம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண நலம் பெறவும் வேண்டி, தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலி்ல் இன்று கூட்டு பிரார்த்தனை நடந்தது. மேலும் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை கொடுக்கவும் வேண்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் அரசு, வேப்ப மரத்திற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதனை அடுத்து சுனை மற்றும் கன்னிமாரம்மன் சன்னதியில் பூஜை நடந்தது. பின்னர் 27 நட்சத்திர விருட்சத்திற்கும் தீபாராதனை காட்டி மலர் தூவி பூஜை நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

1 More update

Next Story