கரூர் கூட்ட நெரிசல்: திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு - மனதை உலுக்கும் சம்பவம்


கரூர் கூட்ட நெரிசல்: திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு - மனதை உலுக்கும் சம்பவம்
x

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

கரூர்

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்குமுன் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண நிச்சயம் முடிந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஜோடி நேற்று கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆகாஷ், கோகுலஸ்ரீ இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story