கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயம் அடைந்த மேலும் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர்,
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி த.வெ.க பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், மத்திய மின்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 5 பேர் நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2-வது நாளான நேற்றும் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடந்தது. ஏமூர்புதூர், ராமா கவுண்டனூர், சுக்காலியூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர்.
இந்த நிலையில், இன்று 3-வது நாளாக கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மேலும் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






