கரூர் துயர சம்பவம்: பாதுகாப்பு குறைவாகவே இருந்தது - பிரேமலதா

கூட்ட நெரிசலில் சிக்கி \மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்
சென்னை,
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,
இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு என்பது மிக, மிக குறைவாக இருந்தது. கரூர் முழுவதும் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது ஆம்புலன்ஸ் கூட்டத்தின் உள்ளே வந்த பிறகுதான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.மரணத்தின் மூலம் அரசியல் பேசுவதை விட உயிரிழந்த குடும்பங்களுக்கு தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கரூர் சம்பவம் தவறான முன்னுதாரணம் . - இனி இதுபோல் நடக்கக்கூடாது. என தெரிவித்தார்.






