கரூர் துயரம்: விஜய் பிரசாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிபிஐ விசாரணை


கரூர் துயரம்: விஜய் பிரசாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிபிஐ விசாரணை
x

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணி முதல் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூர்,

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் மற்றும் கரூர் போலீசாரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், இன்று விஜய்யிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணி முதல் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜய்யிடம் விசாரணை நடைபெறும் அதே நேரத்தில் கரூரிலும் சிபிஐ அதிகாரிகள் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விஜய் பிரசாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 8 பேரிடம், கரூரில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

1 More update

Next Story