சேலம் வழியாக இயக்கப்படும் கொச்சி-பெங்களூரு விமான சேவை ரத்து

விமான சேவை ரத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சேலம் வழியாக இயக்கப்படும் கொச்சி-பெங்களூரு விமான சேவை ரத்து
Published on

சேலம்,

சேலம் விமான நிலையத்திற்கு சென்னை-சேலம், சேலம்-சென்னைக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கொச்சியில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு மதியம் 1.55 மணிக்கு வந்து இந்த விமானம் மீண்டும் மதியம் 2.20 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்கிறது.

மீண்டும் அங்கிருந்து மாலை 4.55 மணிக்கு சேலம் வந்து மாலை 5.15 மணிக்கு கொச்சியை சென்றடைகிறது. இந்த நிலையில் கொச்சி-பெங்களூரு-சேலம், சேலம்-பெங்களூரு-கொச்சிக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் விமானம் டிட்வா புயல் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்த விமான சேவை ரத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com