கொளத்தூர் நிலையம் - ஸ்ரீனிவாசபுரம் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்


கொளத்தூர் நிலையம் - ஸ்ரீனிவாசபுரம் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2025 11:59 PM IST (Updated: 30 Nov 2025 12:00 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதில், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. சுரங்கம் தோண்டும் பணியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பெயரிடப்பட்ட 4 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதில், முல்லை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து கொளத்தூர் நிலையம் வரையிலான 246 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை நேற்று நிறைவு செய்தது.

இதேபோல, குறிஞ்சி சுரங்கம் தோண்டும் எந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் பணியைச் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுணன் பார்வையிட்டார். உடன் தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், இணை பொது மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

1 More update

Next Story