யோகாசனம் செய்வோம், நமது உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்துவோம் - அண்ணாமலை


யோகாசனம் செய்வோம், நமது உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்துவோம் - அண்ணாமலை
x

இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.

பிரதமர் மோடி அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.

யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது.

அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story