“அன்பு, அமைதி, சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து


“அன்பு, அமைதி, சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Dec 2025 9:44 AM IST (Updated: 25 Dec 2025 10:08 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை, கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

'மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை' என்ற இயேசுபிரான் அவர்களுடைய போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும், அன்பு-அமைதி-சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story