மதுரை - குருவாயூர் ரெயில் கூடுதலாக பெரிநாடு நிலையத்தில் நிற்கும் - தெற்கு ரெயில்வே

குருவாயூரில் இருந்து மதுரை திரும்பும்போது மாலை 7.54 மணியில் இருந்து ஒரு நிமிடமும் இந்த ரெயில் பெரிநாட்டில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை - குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் நாளை (புதன்கிழமை) முதல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரிநாடு ரெயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். இதற்கான அனுமதியை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து குருவாயூர் வரும்போது காலை 11.18 மணியில் இருந்து ஒரு நிமிடமும், குருவாயூரில் இருந்து மதுரை திரும்பும்போது மாலை 7.54 மணியில் இருந்து ஒரு நிமிடமும் இந்த ரெயில் பெரிநாட்டில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






