வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
x

வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.

மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி' என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார்.

1 More update

Next Story