கனமழை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி
தென்குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






