அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு


அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு
x

தேவையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் ரூ.5 லட்சம் திருமண முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசு ஊழியர்களின் நலன் கருதி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விதி எண் 110 கீழ் முதல் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், இதை நடைமுறைப்படுத்தும் விதமாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண்களுக்கு 6,000 ரூபாயும் திருமண முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இனி தங்கள் திருமணத்தின் போது முன்பணமாக ரூ.5 லட்சம் முன்பணம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1 More update

Next Story