திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து: ரெயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி


திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து: ரெயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி
x
தினத்தந்தி 13 July 2025 6:22 AM IST (Updated: 13 July 2025 12:23 PM IST)
t-max-icont-min-icon

துறைமுகத்தில் இருந்து எண்னெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரெயிலில் திடீரென தீப்பிடித்துள்ளது.

சென்னை,

சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். 10 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக சென்டிரல் வந்த விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை 5.50 செல்ல இருந்த மைசூர் வந்தேபாரத் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி ரெயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அதிகாலையிலேயே ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story