பனகல் பூங்கா - போட் கிளப் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரையில் 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு சுரங்கப் பாதை பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரம் கொண்டதாகும். இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் சுரங்கப் பாதையை முடிக்க 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், பனகல் பூங்கா முதல் போட் கிளப் நிலையம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் மயில் என்ற எந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com