டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்


டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
x

பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 13 நபர்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இன்று (17.11.2025) தலைமைச் செயலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை மேலாளர் (தர உறுதி) பணியிடத்திற்கு ஒரு நபர், விரிவாக்க அலுவலர் நிலை-Il பணியிடத்திற்கு 06 நபர்கள், தொழில்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 05 நபர்கள், தொழில்நுட்பர் (ஆட்டோ மெக்கானிக்) பணியிடத்திற்கு ஒரு நபருக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் கருணை அடிப்படையில் ஒரு நபர் என மொத்தம் 14 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், பால்வளத்துறை இணை மேலாண்மை இயக்குநர் ச.கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story