மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்


மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
x
தினத்தந்தி 31 May 2025 9:22 PM IST (Updated: 1 Jun 2025 7:20 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவ தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார். அதேவேளையில் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்ற பாகிஸ்தான் கருத்துதை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதன் மூலம், முதன்முறையாக இந்தியா தரப்பில் இருந்து விமானம் இழக்கப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது என்றும், சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி சிங்கப்பூரில் அளித்த பேட்டிக்குப் பிறகு, கேட்கப்பட வேண்டிய மிகவும் முக்கியமான கேள்விகள் உள்ளன. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும். மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது. போர் மூட்டம் இப்போது நீங்கி வருகிறது என கார்கே தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story