காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து மோடி அரசு தாக்குகிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்


காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து மோடி அரசு  தாக்குகிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
x

இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் காங்கிரஸின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், நரேந்திர மோடி அரசின் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.

இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத்திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பாஜக அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கேரா மீது சுமத்தப்பட்டுள்ளது. உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.

ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள் . வாக்குத்திருடனை வாக்குத்திருடன் என்று தான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரஸின் குரலை அடக்க முடியாது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கேரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் காங்கிரஸின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story