மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை
x

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் 30.12.2025, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று தாழையூத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் இருக்காது என்று திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story