மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
x

தியாகராஜநகர், தச்சநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தியாகராஜநகர் மற்றும் தச்சநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (23.9.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் பின்வரும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B.காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச்.காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கி காலனி.

தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story