மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
x

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.

ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.

பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வள்ளியூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story