திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி


திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
x

விழாவைக்காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கழந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கல்விமடை பகுதியில் கருப்பன்ன சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தைக்காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கழந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவிலில் உணவு சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பலரும் சாப்பிட்டனர். இந்த நிலையில் இந்த அன்னதானத்தை தொடர்ந்து சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் வினிநோகம் செய்யப்பட்ட குடிநீர் ஒத்துக்கொள்ளாமல் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story