சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் பதில்


சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா?  உதயநிதி ஸ்டாலின் பதில்
x

சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுத்தர நான் முயற்சி செய்வேன் என்று உதயநிதி கூறினார்.

சென்னை,

சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய எதிர்பார்ப்பும், எனது எண்ணமும் இதுதான். நிச்சயம் இந்த கோரிக்கையை தலைவரிடம் எடுத்து சொல்லி சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுத்தர நான் முயற்சி செய்வேன்.

மூத்த நிர்வாகிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக வரக்கூடிய இளைஞர்களை வழிநடத்த வேண்டும். தி.மு.க. அரசு இந்த 4½ ஆண்டுகளில் பெண்கள், இளைஞர்கள், முதியோர், குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் முதல்-அமைச்சர் பார்த்து பார்த்து பல்வேறு திட்டங்களை கொடுத்து இருக்கிறார்’ இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story