நெல்லையில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை: கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்

நெலலையில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
நெல்லையில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை: கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட கலெக்டர் சுகுமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் அவர், இந்த நிகழ்ச்சியில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியம் மற்றும் வட்டி மானியத்துடன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 7 உறுப்பினர்களுக்கு கடன் தொகையாக ரூ.6 லட்சமும், நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளும் மற்றும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக கைத்தறி உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், கைத்தறி அலுவலர் செண்பகராஜ் மற்றும் கைத்தறி துறை அலுவலகப் பணியாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கெண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com