கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் - சேகர்பாபு


கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் - சேகர்பாபு
x

கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பஸ்நிலையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது;

குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பருவமழை பெரியளவில் இல்லையெனில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில் நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காவல் நிலையம் இல்லாத காரணமாக தற்போது அதற்கும் கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story