நீலகிரி: 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது...!

புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி: 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது...!
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கூடலூர் வனத்துறையினர் 5 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். கூண்டில் புலிக்கு இரையாக ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனாலும், கடந்த 4 மாதங்களாக புலி சிக்காமல் போக்குகாட்டி வந்தது. பின்னர், கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து 30 அடி நீள ராட்சத இரும்பு கூண்டை கொண்டு வந்து புலியை பிடிப்பதற்காக வைத்தனர்.

இந்நிலையில், 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி நேற்று இரவு கூண்டில் சிக்கியது. புலி கூண்டுடில் சிக்கியதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய புலியை லாரியில் கொண்டு சென்று கூடலூரில் அடந்த வனப்பகுதியில் விட்டனர். புலி கூண்டில் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com