ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும் - மசோதா தாக்கல்


ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும் - மசோதா தாக்கல்
x

இந்த மசோதா 22 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த முறையை வழிவகுக்கும்.

சென்னை,-

சட்டசபையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்கள், அதிகார அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்டமானது இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கத்தை விரிவுப்படுத்தி மாநில பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் அல்லா பணியிடங்களில் ஆட்கள் சேர்ப்பதற்கான பணிகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கிறது. இது 22 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த முறையை வழிவகுக்கும். அதற்காக தமிழ்நாடு சட்டம் 14/2022-ஐ திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story