வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 2 பேர் கைது

ராஜஸ்தானைச் சேர்ந்த 2 வாலிபர்கள், தூத்துக்குடியில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களான மசியன் மகன் ராஜேந்திரன் (வயது 33), ராம்கோபிசந்த் மகன் ஹேமந்த்(20) ஆகிய 2 பேரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1வது தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த 30ம் தேதி வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் அதே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதில் ஒருவரை கல்லால் தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சேர்ந்த கோட்டை கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன்(26), தேவர் காலனி 4வது தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாணிக்கராஜா(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






