காவல்துறையின் ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை - தவெக வக்கீல் பேட்டி

கரூரில் பலர் இறந்த செய்தி விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது என்று தவெக வக்கீல் தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வக்கீல் அறிவழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி தலைவர் விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. விஜய் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கக்கூடியவர். இந்தக் கோரமான சம்பவம் அவர் மனதை பலமாக பாதித்திருக்கிறது. விஜய் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.
அடுத்த வாரம் பரப்புரை மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து விஜய் தெரிவிப்பார். காவல்துறையின் நிபந்தனைகளை தவெக பின்பற்றி இருக்கிறது. ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






